Tuesday, 21 June 2011



Monday, February 9, 2009

இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பழமைஉடைய தமிழ் உழவர்களின் வாழ்விடம் தம்பலகாமம். இங்கு சங்கீதக்கலையும், ஆயுள்வேத வைத்தியக் கலையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.



பிரபல சுதேச ஆயுள் வேத வைத்தியர்களில் பெரும் பாலானோர் நாட்டுக்கூத்து நாடகநடிகர்களாக விளங்கினர். முன் நடந்த நாட்டுக்கூத்திலும் பின் நடைபெற்ற நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர்களின் பெற்றோர் இட்ட பெயர்கள் அடியோடு மறைந்து அவர்கள் நடித்துப் புகழ் ஈட்டிய நாடகப்பாத்திர பெயர்களே இன்றும் பிரசித்தமாக வழங்கப்பட்டு வருவது மேற்படி கலைகள் தம்பலகமத்தில் செழித்தோங்கி வளர்ந்து வந்ததற்குச் சிறந்த சான்றுகளாகும்.




தம்பலகாமம் கரைச்சையில் வசித்து வந்த பொன்னையா என்பவர் சிறுத் தொண்டர் நாடகத்தில் நடித்து பார்வையாளர் மனதில் பக்தி உணர்வை ஊட்டியவர். ஆகவே இவரை சிறுத்தொண்டர் அல்லது தொண்டர் பொன்னையா என்றே மக்கள் குறிப்பிட்டனர். இவரது நான்காவது மகன் பொ.கணபதிப்பிள்ளை மாவட்டத்தில் சிறந்த மிருதங்க வித்துவான். அரங்கேற்ற மேடைகளில் மிருதங்கம் வாசிக்க திரு.கணபதிப்பிள்ளையே அழைக்கப்படுவார்.




நாயன்மார்திடலில் காளியப்பு, இவர் அரிச்சந்திரன் நாடகத்தில் விசுவாமித்திரராகத் திறம்பட நடித்து ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டவர். நாடகம் பார்க்கின்றோம் என்பதையும் மறந்து மேடையில் இவர் ஆர்ப்பாட்டமாகத் தோன்றிய போது அதைப்பார்க்க சகியாத பார்வையாளர்கள் கல் எறிந்து சிறு குழப்பத்தையே உண்டாக்கினர். அன்றிலிருந்து இவரது காளியப்பு என்று பெற்றோர் இட்ட பெயர் மறைந்து விசுவாமித்திரர் என்றே அழைக்கப்பட்டார்.




நாயன்மார்திடலில் திரு.பா.வேலுப்பிள்ளை இவர் சிறந்த ராஜபாட் நடிகர்.  கண்ணகி நாடகத்தில் கோவலனாகவும் சத்தியவானில்யமனாகவும் நடித்துப் பெரும் புகழ் ஈட்டினார். நெடியவலிய ஆகிருதியான தோற்றமுடைய இவர், கருமை உருவுடன் யமனாக தோன்றி பார்வையாளர் மனங்களில் பயத்தை ஊட்டினார். இவரை மக்கள் மறைமுகமாக யமன் என்றே அழைத்து வந்தனர். இவர் ஒரு கைராசிக்கார ஆயுள்வேத வைத்தியர், ஆர்மோனிய வாசிப்பாளர். இவரது தந்தையாரும் சுதேசவைத்தியரே இன்னும் சாமியார், மந்திரியார், சீதை போன்ற நாடகப்பாத்திர பெயர்களுடன் விளங்கிய பலர் இங்கு உள்ளனர்.




சங்கீதக் கலையும் வைத்தியக் கலையும்


தம்பலகமத்தில் வைத்தியக்கலை, நாட்டுக்கூத்து, நாடகம்,  நாட்டியம் போன்ற கலைகளும் இணைந்து வளர்சியடைந்து வந்தன. கர்நாடகசங்கீதத்தை நன்கு தெரிந்தவர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். நெல்விளைவிக்கும் உழவர்களும் நோய்தீர்க்கும் மருத்துவர்களும் அரங்கேற்று மேடைகளில் தோன்றி நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தனர். தம்பலகமத்துச் சங்கீதக்காரர்களுக்கு தென்னிந்திய ஆர்மோனிய மிருதங்க வித்துவான்களின் வரவு வரப்பிரசாதமாக அமைந்தது. இவர்களிடம் சங்கீதம் கற்றவர்கள் திறமை உடையவர்களாக உள்ளனர்.




சுமார் கால் மைல்களுக்கும் குறைந்த இடைவெளியில் வட்டவடிவமாக சங்கிலித் தொடர் போல் நெல்வயல்களுடன் தென்னஞ்சோலையாக இருபத்திரண்டு ஊர்களைக் கொண்ட ஊர்த்தொகுப்பே தம்பலகமம். இந்த ஊர்த் தொகுதிகளுக்கு மத்தியிலுள்ள கள்ளிமேட்டு ஆலையடி மைதானமே நாட்டுக்கூத்து நாடகங்கள் அரங்கேற்றும் களமாக நீண்ட காலம் இருந்து வந்தது. சுற்றியுள்ள ஊர்களில் தயாராகும் நாடகங்கள் ஆலையடி மைதானமேடையில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டு வந்தன. தை மாதம் பிறந்தும் பழக்கப்பட்ட நாடகங்கள் கள்ளிமேட்டு ஆலையடி
மைதான அரங்கேற்று மேடையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மேடையேறும். தம்பலகாமம் ஊர்களில் இருந்து மட்டும் அன்றி மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் திரளான மக்கள் வாகனங்களில் வந்து நாடகம் பார்த்து மகிழ்வர்கள். சிப்பித்திடல், நாயன்மார்திடல், வைரத்தடி ஆகிய மைதானங்களில் பழக்கப்படும் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.




 கோயில் குடியிருப்பில் டிக்கட் விக்கப்பட்டு நாடகங்கள் நடத்தப்பட்டு வந்தன. பல்லாயிரக்கணக்கான ஆண் பெண்ரசிகர்கள் இருந்தும் நாடகம் பார்த்து மகிழ்ந்த இடங்கள் இன்று பழடைந்து இருக்கின்றன. நாடகம் பழக்குவோரும் இல்லை. அரங்கேற்று வாரும் இல்லை திரைப்படங்களின் வரவுதான் இதற்குக் காரணம் என்று தெரிகிறது. சினிமாப்படங்கள் தயாராகும் தமிழ் நாட்டிலே நாடகக்கலை போற்றிவளர்க்கப்பட்டு வருகின்றது. சினிமாவுக்கு நாடகம் தான் தாய், பயிற்சிக்களம் என்றும் மதிக்கின்றார்கள். எனவே தம்பலகமத்தில் தொன்று தொட்டு வளர்ந்தோங்கி வந்த முத்தமிழின் ஓர் அங்கமான நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்து முன் போல் வளர்ந்தோங்கச் செய்வது இன்றைய இளம் கலைஞர்களின் இன்றியமையாத கடமையாகும்.



தம்பலகாமம்.க.வேலாயுத

Sunday, 29 May 2011

கந்தளாய்,



கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது.


கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளியெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது.



கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.




வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள்.

இவ்வாலச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.

01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பெருமக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.

02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.

03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.


இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

உசாத்தணை

வரலாற்றுத் திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன்

திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் - பண்டிதர் இ.வடிவேல்

கட்டுரை- 'இலங்கையில் கிடைத்த தமிழ் சாசனத்தில் முதன்முதலாக திருப்பள்ளியெழுச்சியென்ற சொல்' - பேராசிரியர் சி. பத்மநாதன்

கட்டுரை - 'கிழக்கிலங்கையில் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழரின் தொன்மைச் சான்றுகள்' - கலாநிதி.ப.புஷ்பரெட்ணம்

தகவல் திரட்டுவதில் உதவியவர்கள் - கந்தளாய் சிவன்ஆலயக்குருக்கள், திரு.க.ரவிராஜன் (திருப்பணிச்சபை சிவன் ஆலயம்)
Share/Save/Bookmark
0
Your rating: None

jeevaraj's picture

VIDEO - கந்தளாய்க் கல்வெட்டுக்கள்


கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது.


கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளியெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது.



கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.

01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பெருமக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.

02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.

03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.


இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

Share/Save/Bookmark
0
Your rating: None

Wednesday, 25 May 2011


கச்சான் நீ மச்சானா?



‘நாவல் பழம்’ உருட்டும்
நல்ல கச்சான் காற்றேயுன்
ஆவல் தான் என்னவென்று
அறியநான் விரும்புகின்றேன்!

வீடுகளின் முகடுகரை
விசைகூட்டிப் பிய்த்தெடுத்தே
காடுமலை கரம்பெல்லாம்
கச்சிதமாய் வீசுகின்றாய்!

சாலைகளில் குப்பைகளைச்
சருகுகளை நிறைக்கின்றாய்
பாலையெனப் பசுந்தரையை
பலநொடியில் மாற்றுகின்றாய்!

தாத்தாக்கள் பாட்டியரைத்
தள்ளிவிட்டு ஓடுகின்றாய்
பூத்தமலர் காய் பிஞ்சைப்
பறித்தெடுத்து வீசுகின்றாய்!

உச்சியிலே வகிடெடுப்பாய்
உள்ளங்கால் வரை தொடுவாய்
கச்சானே, நீயெனக்குக்
காதலனா; மச்சானா?
அ. கெளரிதாசன்
ஆலங்கேணி கிழக்

நலம் சேர்க்கும் நத்தார்!

சத்தமிடும் போருக்கு சாவு மணியாக
சாகின்ற பயிர்களுக்கு வானமழையாக
யுத்தத்தை நிறுத்திவிடும் புரிந்துணர்வு போல
யுவதிகளை வாழ்விக்கும் மாங்கல்யம் போல
திக்கற்ற ஏழைக்குத் தெய்வம்துணை போல
திரைகடலில் தெப்பத்தின் பாய்மரத்தைப் போல
பக்கத்தே அணைத்தெடுத்து பாலூட்டும் தாயாய்
பரிவோடு நலம்சேர்க்க நத்தார்தான் வருக!
 
போடிமார் இல்லினிலே பூனைக்கும் தயிர்போல்
புதுவசந்த காலத்தே பூத்திருக்கும் மலர்போல்
வாடிநிதம் பிணிகூடி வருந்துபவர் அருந்தும்
வளம் சேர்க்கும் மருந்தாக விருந்தாக என்றும்
ஆடிக்குச் சோடிகட்டும் ஆவணியைப் போலும்
ஆரணங்கின் தேகத்தில் தாவணியைப் போலும்,
நாடியுனை வரங்கேட்டுக் கைகூப்புவோர்கள்
நாளெல்லாம் களிப்புறவே நத்தார்தான் வருக!
 
கப்பலுக்கு வழிகாட்டும் கலங்கரையின்
ஒளிபோல்
கழனிக்கு வளங்கூட்டும் கதிரவனின் கதிர்போல்
செப்பரிய தமிழ்க்கவிக்கு சீர்தளைகள் அணிபோல்
சிங்களவர் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவர்கள் நலம் போல்
பங்கமிலா உறவுக்கும் நட்புக்கும் என்றும்
பாலமிடும் சோதரராய் பாரினிலே அன்பு
மங்காமல் நீதிநெறி சமத்துவங்கள் வாழும்
மலர்க்காடாய் புவிமாற நத்தார்நாள் வருக!
 
கல்விபயில் மாணவர்தம் கரமேந்தும் நூலாய்
கவிபுனையும் பாவலரின் கையிலுள்ள கோலாய்
தொல்லுலகில் மேழியினால் கழனிதனில் செல்வம்
தோற்றுவிக்கும் உழவனது இணையற்ற தொண்டாய்,
நல்லவர்கள் நீதியுடன் நேர்மைவழி பற்றி
நடுநிலைமை வழங்குகின்ற தார்மீகப் பணியாய்
வல்லமைகள் தந்தெமது வாழ்வில் ஒளி பிறங்க
வாழ்த்தியுனை அஞ்சலித்தோம், நத்தார்நாள் வருக”
 
கவிஞர் அ. கெளரிதாசன்
ஆலங்கேணி கிழக்

அ.கெளரிதாசன்


அழுகின்றேன்

காசை இறைத்துக் காலம் முழுதும்
காமன் உலகில் பயணித்தேன்
ஆசை நாயகி ஒன்றா, இரண்டா?
ஆனந் தத்தின் பெறுபேறு!
*
ஊசி மருந்து வில்லைக ளோடும்
உலக வாழ்க்கை தொடர்கிறது
தூசி படிந்த வாழ்க்கையை நினைக்க
துயரம் தொண்டையை அடைக்கிறது
*
கோயில் சிலைபோல் மனைவி யிருக்க
கோட்டா னோடு வாழ்ந்திட்டேன்!
பாயில் விழுந்து துயரம் பற்றப்
பாவச் செயலை நினைக்கின்றேன்!
*
தாலி கட்டிய தையலாள் தடுத்தும்
தாசிகள் இல்லம் சென்றிட்டேன்!
வாலி பத்தினைத் தொலைத்தது மிச்சம்
வாழ்வில் எதனைக் கண்டிட்டேன்!
*
அன்னை தந்தையர் அறிவுரை யெல்லாம்
அப்பால் தள்ளி வைத்திட்டேன்!
இன்பம் மதுவில் மூழ்குதல் என்றே
இரவு பகலாய் குடித்திட்டேன்!
*
எழிலாம் தோட்டம், செந்நெற் கழனிகள்
எல்லாம் விற்று முடித்திட்டேன்!
வழிவே றின்றி வைத்திய சாலையின்
வார்ட்டில் படுத்து அழுகின்றேன்!

Sunday, January 18, 2009

தம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009









தம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்..