Wednesday, 25 May 2011


கச்சான் நீ மச்சானா?



‘நாவல் பழம்’ உருட்டும்
நல்ல கச்சான் காற்றேயுன்
ஆவல் தான் என்னவென்று
அறியநான் விரும்புகின்றேன்!

வீடுகளின் முகடுகரை
விசைகூட்டிப் பிய்த்தெடுத்தே
காடுமலை கரம்பெல்லாம்
கச்சிதமாய் வீசுகின்றாய்!

சாலைகளில் குப்பைகளைச்
சருகுகளை நிறைக்கின்றாய்
பாலையெனப் பசுந்தரையை
பலநொடியில் மாற்றுகின்றாய்!

தாத்தாக்கள் பாட்டியரைத்
தள்ளிவிட்டு ஓடுகின்றாய்
பூத்தமலர் காய் பிஞ்சைப்
பறித்தெடுத்து வீசுகின்றாய்!

உச்சியிலே வகிடெடுப்பாய்
உள்ளங்கால் வரை தொடுவாய்
கச்சானே, நீயெனக்குக்
காதலனா; மச்சானா?
அ. கெளரிதாசன்
ஆலங்கேணி கிழக்

No comments:

Post a Comment