Monday, October 13, 2008
எனது முகவுரை.
எனது சிறுகதைகளைப் படித்த ஒரு அன்பர் 'நீங்கள் ஒரு மரபுக்கவிஞர். ஏன் சிறுகதைகளை எழுதி வீணாக்குகிறீர்கள்.' என்று எழுதினார். அவர் என்மேல் கொண்ட கரிசனையில் எழுதினாரா? அல்லது எழுதவேண்டாம் என்று எழுதினாரா? எனக்கு விளங்கவில்லை. ஆனால் 'ஏன் அழுதார்' என்ற எனது சிறுகதையைப் படித்த பிரபல சிறுகதை எழுத்தாளர்; திரு.அ.ஜேசுராஜா அவர்கள்; நான் கண்டியில் இருந்தபோது எனது விலாசத்தைத் தேடிப்பிடித்து வந்து என்னைப் பாராட்டி எழுதும்படி கூறினார். கவிதையைப் படிப்பவர்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள். திரு.அ.ஜேசுராஜா போன்றோர் இருக்கிறார்கள் என்ற மனோதிடத்தில் சிறுகதைகளை எழுதுகிறேன். பல சிறுகதைகள் பரிசுகளையும் பெற்றுள்ளன. பரிசுகள் பெறுபவை யாவும் நல்ல தரமான கதைகள் என்று நான் சொல்ல வரவில்லை.
இலங்கைத் தமிழருக்கென்று ஒரு இலக்கிய வரலாறு இருக்கிறதா? நாம் இதுவரை காலமும் இந்திய இலக்கிய வரலாற்றையே இலங்கைத் தமிழரின் வரலாறு என்று போற்றி வந்த மாயையை அண்மைக்கால தமிழக அரசின் அரசியல் நிலை உடைத்தெறிந்து விட்டது. இனியும் இந்திய இலக்கிய வரலாற்றை இலங்கைத் தமிழரின் இலக்கிய வரலாறாகக் கொள்ளும் மாயையை விடுத்து இலங்கைத் தமிழருக்கும் ஒரு பாரம்பரிய இலக்கிய வரலாறு இருக்கிறது என்பதை உறுதியாக்க விழித்தெழவேண்டும். பல்கலைக்கழகங்கள் இதனை ஒரு விரதமாகக் கொண்டுழைக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கெனத் தனியான இலக்கிய வரலாற்றை உருவாக்க வேண்டும். இலங்கையிலேயே இந்தியத் தமிழர்கள் என்று நாம் வேற்றுமை காட்டும்போது, இந்தியாவில் நம்மை இலங்கை அகதிகள் என்று அவர்கள் வேறுபடுத்தி வைப்பதில் தவறில்லை. நாங்கள் இலங்கைத் தமிழர்கள்தான்.
உலகம் தோன்றிய காலத்தில் ஒரேதிணிவாக இருந்த நிலப்பரப்பு காலகதியில் இன்று உள்ளநிலையில் இருப்பதற்கான புதிரை கண்டநகர்வுக் கொள்கையும், ஆய்வுகளும் விளக்குகின்றன. உண்மையில் இலங்கையில் இருந்தே இந்தியாவுக்கும் ஏனைய நிலப்பரப்புக்குளுக்கும் மக்கள் புலம் பெயர்ந்தார்கள். அதுதான் உண்மை. இன்றைய இந்தியாவிலும், அதற்கப்பாலும் வாழ்கின்ற மக்கள் நமது இலங்கையிலிருந்து அதாவது குமரிக்கண்டத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள்தான். நாம் இந்தியாவில் இருந்து வந்தவர்களல்ல. இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் சந்ததியினர். இதனை ஆய்வாளர்கள் நடுநிலையிருந்து ஆய்ந்தறிய வேண்டும். இந்திய ஆய்வாளர்கள் தமது வரலாற்றை எழுதிவைத்தார்கள். புராண, இதிகாசக் கதைகளைப் பதிவு செய்து மகாவம்சம் எழுதப்பட்டுள்ளது. பாளி மொழியில் எழுதப்பெற்ற மகாவம்சம் ஒரு வரலாற்று நூலல்ல. கிரேக்க நாட்டு இதிகாசங்களையும், இந்திய இதிகாசங்களையும் படித்தவர்களுக்கு மகாவம்சத்தில் கூறியுள்ள அம்சங்கள் புரியும். ஹம்சன் கதையோடு பாண்டு கபாயன் கதை ஒத்திருப்பதை அவதானிக்கலாம். யூலிசஸ் கதையோடு விஜயனின் கதை ஒத்துப் போவதை அவதானிக்கலாம். இதற்குரிய காரணங்கள் என்ன? ஆதி மனிதர்கள் ஒருநிலத்திணிவில் இருந்து படிப்படியாகப் பல்வேறு காரணங்களால் பிரிந்து புலம் பெயர்ந்துள்ளார்கள். பாளி மொழியில் பல இலக்கிய வடிவங்கள் இருந்தன. சமஸ்கிருத மொழியிலும், லத்தீன் மொழிகளிலும் பல இலக்கிய வடிவங்கள் இருந்தன. அம்மொழிகள் வழக்கொழிந்து விட்டன. ஆனால் அந்த மொழிகள் சிறந்து விளங்கியமையினால்தான் அவற்றின் கருவூலங்கள் இன்றைய அனைத்து மொழிகளும் உள்வாங்கி வளம்பெற்றன.
ஒவ்வொருவரும் தமது மொழிதான் சிறந்தது எனக் கூக்குரல் எழுப்புகின்றார்கள். எவராவது தமது தாயை வெறுத்தொதுக்குவார்களா? தமது தாய்க்குச் சிறந்த இடம் ஒதுக்குவார்கள். அதேபோல்தான் ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி சிறப்பானது. இதனை நாம் மனதில் கொள்ளவேண்டும். நாம் போற்றி 'நமது இலக்கியம்' என்று படிக்கின்ற இந்திய இலக்கியங்கள் இலங்கைத் தமிழர்களை ஓரங்கட்டுவதை இன்னமும் நாம் உணரவில்லை. ஈழத்தமிழர்கள் தனித்துவமுடையவர்கள். அவர்களுக்கான 'இலக்கிய வரலாறு' அவசியம் தேவை. தொடர்ந்தும் இந்தியர்களது இலக்கிய வடிவங்கள் ஈழத்தவர்களுக்குத் Nவையில்லை. ஏனெனில் ஈழத்தமிழர் நிரந்தரமானவர்கள். துணிவுடன் போராடவல்லவர்கள்

No comments:
Post a Comment